நீலகிாி மாவட்டத்தில் 7 நாட்கள் தொடா் மழை..! 2 வயது குழுந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.. நீருக்குள் சிக்கியிருக்கும் மக்கள்..

ஆசிரியர் - Admin
நீலகிாி மாவட்டத்தில் 7 நாட்கள் தொடா் மழை..! 2 வயது குழுந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.. நீருக்குள் சிக்கியிருக்கும் மக்கள்..

இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கு பெயா்போன நீலகிாி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஊட்டி, கூடலுாா், பந்தலுாா், குந்தா, அவலாஞ்சி போன்ற பகு திகளில் 7 நாட்களாக தொடா்ந்தும் மழை பெய்து வருகின்றது. 

தொடா்ச்சியான மழையினால் நீரோடைகள், நீா்வீழ்ச்சிகளில் வெள்ளப் பெருக்கு உண்டான நிலையில், அவலாஞ்சி, அப்பா் பவானி, எமரால்டு, கனடா உள்ளிட்ட அணைக்கட்டுக்களில் வெள்ள நீா் உயா்ந்திருக்கின்றது. 

2 பேரை அடித்து சென்றது

ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 45), சுசிலா (50) ஆகியோர் நஞ்சநாடு அரசு தோட்டக்கலை பண்ணையில் பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு 

தங்கள் வீட்டிற்கு நடந்து சென்றனர். பலத்த மழை காரணமாக உப்புட்டி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றது. அப்போது அந்த கால்வாயை கடக்க முயன்றபோது இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 

பின்னர் நேற்று காலை உப்புட்டி கால்வாய் ஓரத்தில் கிடந்த அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.

வீடு இடிந்து 2 பேர் பலி

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமாபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில், அவரது மனைவி அமுதா (35), மகள் பாவனா (9) ஆகியோர் உயிரிழந்தனர். 

அவரது மகன் லோகேஷ்வரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின் உற்பத்தி நிலைய கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. 

இதில் மண்ணுக்குள் புதைந்து கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஞ்சு (30) என்பவர் பரிதாபமாக இறந்தார்.

ரெயில் தாமதம்

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைரெயில் செல்லும் தண்டவாளம் நனைந்தபடி இருந்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரெயிலின் சக்கரங்கள் தண்ட வாளத்தில் சரியாக இயங்கவில்லை. 

இதன் காரணமாக காலை 10.30 மணிக்கு குன்னூர் வர வேண்டிய மலை ரெயில் அரை மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது. பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் 

போக்குவரத்து பாதிக்கப்பட்டன. எல்லமலை பகுதியை சேர்ந்த ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஹெலிகாப்டரில் உணவு

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அருகே காட்டுக்குப்பையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மற்றொரு நீர் மின் உற்பத்தி அலகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மின்நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் 

பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவலாஞ்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மஞ்சூரில் இருந்து காட்டுக்குப்பை செல்லும் ரோடு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

இதனால் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் உணவு இல்லாமல் தவித்தனர். இதுபற்றி அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார். 

அதன்படி நேற்று சென்னையில் இருந்து காட்டுக்குப்பைக்கு ஹெலிகாப்டர் சென்றது. பின்னர் அங்கிருந்த தொழிலாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.

22 குடிசைகள்

நீலகிரி மாவட்டத்தை போல் கோவை மாவட்டத்திலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள வால்பாறை பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி அருகே சர்க்கார்பதி வனப்பகுதியில் நாகூர்ஊத்து என்ற இடத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்த 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் 

தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மேடான பகுதியை நோக்கி ஓடினார்கள். இருப்பினும் குஞ்சப்பன் (40), அவரது மனைவி அழகம்மாள் (35), மகள்கள் ஜெயா (15), சுந்தரி (2), மகன் கிருஷ்ணன் (6) மற்றும் அந்தப்பகுதியை 

சேர்ந்த பாப்பாத்தி (24), தனலட்சுமி (5), லிங்கசாமி (11) ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியதால் குஞ்சப்பன் உள்பட 7 பேரை மட்டும் வனத்துறையினர் மீட்டனர். 2 வயது குழந்தை சுந்தரி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. 

வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வேவர்லி எஸ்டேட் பிரிவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை கொட்டியதால் நொய்யல் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரூரில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் ஆற்றை ஒட்டி ஆத்துமேடு என்ற பகுதி உள்ளது. 

இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. அங்கு ஆற்று நீர் உள்ளே புகுந்ததால் 55 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். கோவை தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரில் சிக்கிய 55 பேரையும் கயிறு கட்டி மீட்டனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Radio