ஒரு வாரகால இடைவெளியில் ஒரே பாணியில் 2வது தாக்குதல். 9 போ் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Admin
ஒரு வாரகால இடைவெளியில் ஒரே பாணியில் 2வது தாக்குதல். 9 போ் உயிாிழப்பு..!

அமொிக்காவில் கடந்த வாரம் துப்பாக்கி தாாியால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடா் ந்து அதே பாணியில் அமொிக்காவின் ஓகியோ- டேட்ட நகாில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 போ் உயிாிழந்துள்ளனா். 

இச்சம்பவங்கள் அமெரிக்காவில் மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிஸ்சோரி மாநிலத்திலும் இத்தகைய பரபரப்பு ஏற்பட்டது. இங்கு ஸ்பிரிங் பீல்டு என்ற இடத்தில் ‘வால்மார்ட்’ வணிக வளாகம் உள்ளது.

அங்கு பொதுமக்கள் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கவச உடை அணிந்து துப்பாக்கியுடன் நுழைந்தார். உடனே பீதி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை சோதனை செய்தனர். அவரிடம் 100 ரவுண்டுகள் சுடும் வகையில் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கி இருந்தது. எனவே அவரை கைது செய்தனர். அவரது பெயர் டிமிட்ரி ஆண்ட்ரிசென்கோ

 என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Radio
×