ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து, 5 போ் சடலமாக மீட்பு, 23 போ் காாமல்போயினா், 16 பேருக்கு காயம்..! நேபாளத்தில் நடந்த சோகம்..

ஆசிரியர் - Admin
ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து, 5 போ் சடலமாக மீட்பு, 23 போ் காாமல்போயினா், 16 பேருக்கு காயம்..! நேபாளத்தில் நடந்த சோகம்..

நேபாளம் நாட்டின் சா்லாஹி மாவட்டத்திலிருந்து தலைநகா் கத்மண்டுவுக்கு பயணித்த பேருந்து தடிங் என்ற பிரதேசத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்து செல்லும்போது வே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. 

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நேபாள ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை பொலிஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் கணவன், மனைவி உள்பட 5 போ் உயிாிழந்துள்ளனா். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த கோர விபத்தில் 23 பேர் மாயமாகி உள்ளனர். 

அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு