SuperTopAds

வேதனைகளை தாங்கி வாழ்வதற்கு அண்ணன் பயிற்றுவித்துள்ளாா்..! இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
வேதனைகளை தாங்கி வாழ்வதற்கு அண்ணன் பயிற்றுவித்துள்ளாா்..! இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..

விடுதலைக்காக போராடி இன்று எம் சமூகத்திற்குள் போாின் தழுமபுகளுடன் வாழந்து கொண்டிருக்கும் பலரை நாம் மறந்திருகிறோம். அப்படியான ஒரு போராளி தொடா்பாக சமூக வலைத்தளததில் வெளியான தகவலை யாழ்.வலயம் ஆசிாிய பீடம் அப்படியே இங்கே பிரசுாிக்கிறது.

குறித்த போராளியின் புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உதவுங்கள்..! முடியாவிட்டால் மற்றவா்களுக்கு தொியப்படுத்துங்கள் அவா்களால் முடிந்தால் உதவட்டும். 

இவர் ஒரு முன்னால் போராளி பெயர் நிஷாந்தன் ஈச்சம் அளவக்கை பெரிய மடுவைச்சேர்ந்தவர். இவர் 2007 ஆண்டு சேமமடு ஓமந்தையில் தாக்குதல் முயற்சிக்கு சென்ற வேளையில் தவறி வெடித்து தன்னுடைய இரண்டு கைகளையும்,

கண் பார்வையினையும் இழந்து,முகத்திலும் உடலிலும் தழும்பு காயங்களுடன் வறுமையோடு வாழ்ந்து வருகிறார். தற்செயலாக இவரை சந்திக்க நேர்ந்தது உரையாடும் வேளையில் இவரின் வார்த்தைகள் நெகிழ்சியாக இருந்தது அதை பகிரலாமென நினைத்து பகிர்கிறேன்.

கண் தெரியாது கைகள் இல்லை உடம்பெல்லாம் காயங்களுடன் எப்படி உங்ள் வாழ்ககையை வாழ்கிறீர்கள் என்று வினவிய போது அவரோ நான் திருமணமானவன் பிள்ளைகள் இல்லை மனைவிதான் என்னை கவனித்துக்கொள்கிறா 

வேறு உதவிக்கு யாரும் இல்லை சிறு சிறு உதவித்திட்டங்கள் கிடைத்தாலும் வாழ்க்கையை கொண்டு செல்ல போதாதுதான் இருந்தாலும் வாழ்கிறோம். வலியையும் வேதனையையும் தாங்கிக்கொண்டு வாழ்வதற்கு அண்ணன் பயற்றுவித்திருக்கிறார் விதியென்றால் என்ன செய்வதென்றார்.

எனக்கு புல்லரித்து விட்டது வலியின் உச்சத்திலும் அழுகையை மறந்து பேசுகிறாரே என்று.
நண்பர்களே இதனை அதிகம் பகிருங்கள் யாராவது இவரின் வாழ்கையில் ஏதாவது கடுகளவேனும் செய்ய முடிந்தால் பெரிய மனதோடு செய்ய முன்வாருங்கள்.

அவரின் தொலைபேசி இலக்கம்-0775016256