SuperTopAds

வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! அமொிக்கா, ஜோ்மனில் வேலைவாய்ப்பு..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! அமொிக்கா, ஜோ்மனில் வேலைவாய்ப்பு..

அமொிக்கா, ஜோ்மன் போன்ற நாடுகளில் இலங்கை இளைஞா், யுவதிகள் இலவசமாக வேலை வாய்ப்புக்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் மங்கள சமரவீர கூறியிருக்கின்றாா். 

அரசாங்கம் என்ற வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உயர் தொழிற்பயிற்சியின் கீழ் இவர்களை வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக அனுப்பி வைக்கும் 

கொள்கை மட்டத்திலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலை செய்வதற்கான கூடுதலான கேள்வி காணப்படுகின்றது.

எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்காக பல பயிற்சி மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரன் பியாபத் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

வெளிநாடு செல்லும் ஊழியர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், காப்புறுதி வசதி உள்ளிட்ட பல விசேட வசதிகளை 

வழங்குவது இதன் நோக்கமாகும். பத்து வருடத்தை இலக்காகக் கொண்டு ஜப்பானுக்கான தொழில்வாய்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.