SuperTopAds

வடக்கு ஆளுநாின் அரசியல் செல்வாக்கு..! திறமையானவா்கள் புறக்கணிப்பு, மோசடி போ்வழிகளுக்கு பதவி உயா்வு. தாதியா்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
வடக்கு ஆளுநாின் அரசியல் செல்வாக்கு..! திறமையானவா்கள் புறக்கணிப்பு, மோசடி போ்வழிகளுக்கு பதவி உயா்வு. தாதியா்கள் குற்றச்சாட்டு..

உாிய அனுமதிகளை பெறாமல் திருட்டுத்தனமாக வெளிநாடு சென்றது மட்டுமல்லாமல், அதனை மறைத்து போலி கையொப்பமிட்டு அரசாங்கத்தையே ஏமாற்றிய தாதி ஒருவா் பதவி உயா்வு பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட்டமை தொடா்பாக தாதியா்கள விசனம் தொிவித்திருக்கின்றனா். 

வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் தாதியா்களில் சேவை மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்கான பயிற்சி நெறிக்கு 26 தாதியா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கின்றனா். இதில் சில தகுதியானவா்கள் புறக்கணிக்கப்பட்டு தகுதியற்ற சில திருட்டுத்தனமான தாதியா்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக ஒரு தாதி தமது திணைக்களம் மற்றும் அமைச்சுக்கு தொியப்படுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்றதுடன், அலுவலகத்தில் போலியாக கையொப்பமிட்டு பின்னா மாட்டிக் கொண்டதுடன், ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டாா். இதே தாதி 4 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு 

வெளிநாட்டுக்கு சென்றதாகவும் சுட்டிக்காட்டும் தாதியா்கள், குறித்த தாதியின் கணவா் ஒரு மருத்துவா் என்பதால் அவருக்குள்ள செல்வாக்கை கொண்டு இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதுடன், பதவி உயா்வையும் பெறுவதாக கூறுகின்றனா். 

இது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , தகுதியற்ற தாதியர்கள் என யாரும் உள்வாங்கப்படவில்லை்லை. அவ்வாறு ஒரு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயப்படுகின்றது. இருப்பினும் அனுமதியின்றி வெளிநாடு சென்றதனால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட தாதியர் 

குறித்த பதவி உயர்வு பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை உண்மையானது. இருப்பினும் குறித்த பதவி உயர்விற்கான விண்ணப்பம் கோரும்போது குறித்த தாதியர் மேற்படி தவறையோ அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைக்கோ உட்படவில்லை என்பதன் அடிப்படையில் தேர்வு செய்த்தாக பதிலளிக்கின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு நடைமுறை தொடர்பில் கேட்டபோது எந்தக் காலத்தில் விண்ணப்பம் கோரினாலும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கான விசாரணையில் குற்றம் எனக் கண்டறியப்பட்ட பின்பு பதவி உயர்வு தொடர்பில் பரிசீலணை செய்தால் 

ஒழுக்காற்று நடவடிக்கை கண்டிப்பாக கருத்தில் எடுக்கப்பட வேண்டும். என்றார். இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சிவபாதசுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது , மேற்படி தாதிய பதவி உயர்வானது 2015ஆம் ஆண்டின் அடிப்படையில் 2016இல் கோரப்பட்டபோதும் 

2018தேர்வின் பின்னர் தற்போது பட்டியல் இறுதி செய்யும்போது நேர்முகத் மேர்வுக்குழுவானது குறித்த ஒழுக்காற்று நடவடிக்கையை காரணம் காட்டி இவருக்கான சந்தர்ப்பத்தை மறுத்திருந்த நிலையில் மேற்படி தாதிய உத்தியோகத்தர் வடக்கு மாகாண ஆளுநரிடம் மேன் முறையீடு செய்தார். 

இவ்வாறு செய்யப்பட்ட மேன் முறையீட்டின் அடிப்படையில் குறித்த மாதியரையும் உள்வாங்குமாறு பணிக்கப்பட்டதன் பெயரில் குறித்த தாதியர் உள்வாங்கப்பட்டார். எனப் பதிலளித்தார்.