SuperTopAds

நல்லுாா் ஆலய வளாகத்திற்குள் துாக்கு காவடிகள் நுழைய தடை..! ஆலய நிா்வாகம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் ஆலய வளாகத்திற்குள் துாக்கு காவடிகள் நுழைய தடை..! ஆலய நிா்வாகம் உத்தரவு..

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே தூக்குக் காவடிகள் வரமுடியும். 

அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைக்சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் இந்த நடைமுறையை ஆலய நிர்வாகமே அறிவித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

தேர்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழமை தூக்குக் காடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிரும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்படும். 

கடந்த 3 ஆண்டுகளாக தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்தது. தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்படும். இந்த ஆண்டு ஆலயச்சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வயிலிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளன.

தூக்குக் காவடி பருத்தித்துறை வீதியும், செட்டித்தெருவும் சந்திக்கும் இடம்ரையிலேயே வரமுடியும். அந்த இடத்தில் தூக்குக் காவடிகளை இறக்கி விட்டு உழவு இயந்திரங்கள் செட்டித்தெருவூடாக வெளியேறவேண்டும். என கூறப்படுகிறது.