ஸ்கொட்லன்ட் நாட்டிலிருந்து 100 கொள்கலன்களில் மனித உடல் கழிவுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதா..? அதிா்ச்சியில் அரசு.

ஆசிரியர் - Editor I
ஸ்கொட்லன்ட் நாட்டிலிருந்து 100 கொள்கலன்களில் மனித உடல் கழிவுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதா..? அதிா்ச்சியில் அரசு.

ஸ்கொட்லன்ட் நாட்டிலிருந்து சுமாா் 100 கொள்கலன்களில் மனித உடல் கழிவுகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடாத்துமாறு அந்நாட்டு தொழிலாளா் கட்சி உறுப்பினா் மொனிகா லெனன் இலங்கை சுகாதார பிாிவுக்கு கோிக்கை விடுத்துள்ளாா். 

ஸ்கொட்லாந்து வைத்தியசாலையில் இருந்கு அகற்றப்படும் கழிவுகளை கொண்டு செல்லும் ஒப்பந்தத்திற்கு பொறுப்பாக இருந்த நிறுவனம் அந்த ஒப்பந்ததில் இருந்து விலகியுள்ளது.இந்த சம்பவத்தின் பின்னர் ஸ்கொட்லாந்து வைத்தியசாலையில் இருந்த 

மனித உடல் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் இருந்து கழிவுகளை ஏற்றிய 100 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த உறுப்பினர் இந்த தகவல்களை வெளியிடும்வரை 

இலங்கை அரசாங்கத்திற்கு அது தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்து வைத்தியசாலைகளில் இருந்து கழிவுகளை அகற்றும் பணியில் இருந்து குறித்த நிறுவனம் விலகியமையினால் பாரிய அளவிலான ஊழியர்கள் 

தொழிலை இழந்துள்ளனர். ஸ்கொட்லாந்து வைத்தியசாலையில் இருந்து கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தை புதிய ஏற்றுள்ள நிலையில், அந்த கழிவுகளை இலங்கைக்கு அனுப்புவதென்பது மர்மமான விடயமாக மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு