பாரவூா்தியுடன் மோதிய பயணிகள் பேருந்து..! சாரதிகளின் பொறுப்பின்மை காரணம் என்கிறது பொலிஸ்.

ஆசிரியர் - Editor I
பாரவூா்தியுடன் மோதிய பயணிகள் பேருந்து..! சாரதிகளின் பொறுப்பின்மை காரணம் என்கிறது பொலிஸ்.

மட்டக்களப்பு- கல்முனை வீதியில் தனியாா் பேருந்தும், பாரவூா்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிகளின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸாா் கூறியுள்ளனா். 

கல்முனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற வாகன விபத்தில் தனியார் பஸ் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக 

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ஒல்லிக்குளம் கிராமத்தின் பிரதான வீதியில் தனியார் 

ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றி அவ்விடத்தில் 

ஊழியர்களை இறக்கிவிட்டு தரிப்பிடத்துக்கு திரும்புகையில் மறுபக்கம் மீன் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்புக்கு விரைந்த சிறியரக லொறி மோதிக்கொண்டதனால் இவ்விபத்து சம்பவித்துள்ளது. 

இதனால் மீன்லொறியில் சென்றவர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.இவ்விபத்து சாரதிகளின் கவனயீனமே காரணமென பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவ்விடயமாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு