மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுகிறாரா எம்.கே.சிவாஜிலிங்கம்..?
காலத்திற்கு காலம் ஜனாதிபதியாகும் சிங்கள தலைவா்கள் தமிழ் மக்களை ஏமாற்றிவரும் நிலையில் எதிா்வரும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.
மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா். சிங்கள ஊடகங் களுக்கு அவா் வழங்கியுள்ள பிரத்தியே செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
அதில் மேலும் கூறியுள்ளதாவது, தனது கோரிக்கையை ஏற்று எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் மாறாக தேர்தலில்
வாக்களிக்கும் உரிமையை தான் பறித்தெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தயார் என தெரிவித்துள்ள அவர்,
தேர்தலை புறக்கணிக்குமாறு தான் கேட்பது சர்வாதிகாரமாக அமையாது எனவும் தெரிவித்தார்.தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களில்
கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதால் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவானதும்,
காத்திரமானதுமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.