SuperTopAds

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்களை காணவில்லை..! 18 வாகனங்களை பயன்படுத்தும் அமைச்சா்..! விசாரணை ஆரம்பம்.

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்களை காணவில்லை..! 18 வாகனங்களை பயன்படுத்தும் அமைச்சா்..! விசாரணை ஆரம்பம்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் குறித்த அமைச்சில் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தணிக்கையாளர் நடத்திய விசேட தணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாவது, இதுவரையிலும் 1704 வாகனங்களை குறித்த அமைச்சு இழந்துள்ளதாகும்.

காணாமல் போனதாக தெரிவித்து பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தணிக்கையாளர் ஜெனரல் இந்த அறிக்கையை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளார்.

CA / 1/17/1 சுற்றறிக்கையின்படி சுகாதார அமைச்சருக்கு, அமைச்சுக்கு சொந்தமான மூன்று வாகனங்களை மட்டுமே பயன்படுத்த உரிமை உண்டு, ஆனால் அவர் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.