உலகளவில் சிறந்த கட்டுமான விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் படேல் சிலை!
உலகளவில் சிறந்த கட்டுமானத்திற்கு லண்டனில் வழங்கப்படும் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையும் இடம்பெற்றுள்ளது.
லண்டனை சேர்ந்த கட்டுமான பொறியியல் நிறுவனமான ஐஸ்டிரக்ட்இ((IStructE)) கடந்த 52 ஆண்டுகளாக உலகளவில் சிறந்த கட்டுமானத்திற்கு விருதினை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டு வழங்கப்பட உள்ள விருதுக்கான பரிந்துரை பட்டியலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த 182 மீட்டர் உயரம் கொண்ட ஒற்றுமைக்கான சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையும் இடம்பெற்றுள்ளது.
இதனோடு சீனாவில் உள்ள சுற்றும் மேல் தளத்தைக் கொண்ட விளையாட்டு மைதானம், லண்டனில் 21 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்கள் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த விருதுகள் வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள விழாவில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஓப்ரா இல்லம், இங்கிலாந்தின் செவெர்ன் பாலம் உள்ளிட்டவை இந்த விருதினை பெற்றுள்ளன.