நல்லுாா் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு 650 பொலிஸாா் பாதுகாப்பு..! 20 லட்சம் பணம் கொடுக்கிறது மாநகரசபை.. மக்கள் விசனம்.

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு 650 பொலிஸாா் பாதுகாப்பு..! 20 லட்சம் பணம் கொடுக்கிறது மாநகரசபை.. மக்கள் விசனம்.

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் சுமாா் 650 பொலிஸாா் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில், யாழ்.மாநகரசபை நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் பணம் செலவிடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் 20 லட்சம் ரூபாய் பணத்தில் யாழ்.மாநகர எல்லைக்குள் அபிவிருத்தியை செய்திருக்கலாம். என மக்கள் விசனம் தொிவித்துள்ளதுடன், எதற்காக 20 லட்சம் பணம் செலவிடப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனா். 

நல்­லூர் கந்­த­னின் வரு­டாந்த மகோற்­ச­வத்தை முன்­னிட்டு பாது­காப்­புப் பணிக்­காக வருகை தந்­ துள்ள 650 பொலி­ஸா­ரும் 5 பாட­சா­லை­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் தங்­கி­யுள்ள பாட­சா­லை­க­ளுக்­கான மின்­சார வசதி, தங்­கு­மி­ட­வ­சதி ஆகி­ய­வற்­று­டன் 

பொலி­ஸா­ரின் குளி­யல் மற்­றும் பொதுப் பாவ­னைக்­கான தண்­ணீர் வச­தி­க­ளும் மாந­கர சபையே ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்­டும்.குறித்த 650 பொலி­ஸா­ருக்­கும் தின­மும் இரு நேர தேநீர், சிற்­ றுண்டி, குடி­தண்­ணீர்ப் போத்­தல் என ஒரு பெரும் தொகையே செலவு ஏற்­ப­டு­கின்­றது. 

இவ்­வாறு ஏற்­ப­டும் செல­வு­க­ளில் குடி­தண்­ணீ­ருக்­காக 2 லட்­சத்து 60 ஆயி­ரத்து 780 ரூபா­வும் , பிஸ்­ கட் வழங்­கு­வ­தற்கு 5 லட்­சத்து 7 ஆயி­ரம் ரூபா­வும் தேநீர்ச் செல­வாக 5 லட்­சம் ரூபா­வும் ஏனைய செல­வாக 60 ஆயி­ரம் ரூபா­வும் தேவைப்­ப­டு­கின்­றது. 

மற்­றும் பிற இதர செல­வு­க­ளு­டன் 20 லட்­சம் ரூபா செலவு ஏற்­ப­டும் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ ளது. இவ்­வாறு கட­மைக்­குச் சமு­க­ம­ளிக்­கும் பொலி­ஸா­ருக்கு மடுத் திருத்­த­லம் போன்­ற­வற்­றில் உள்­ளூ­ ராட்சி மன்­றங்­கள் நிதிச் செலவு செய்­கின்­ற­னவா என்று ஆரா­யப்­பட்­ட­தில் 

அவ்­வாறு எந்­தச் செல­வும் உள்­ளூ­ராட்சி மன்­றம் மேற்­கொள்­வ­தில்லை என்றே கண்­ட­றி­யப்­பட்­டது. அத­னால் இந்த நிதி­யில் பெரு அபி­வி­ருத்­தி­க­ளைச் செய்­ய­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.  இதே­ வேளை, முன்­னைய வரு­டங்­க­ளைப் போலன்றி 

நல்­லூர் இந்த முறை கச்­சான் கடை நடத்­து­வ­தற்­கான ஏல­மி­டப்­பட்­ட­போது 10 ஆயி­ரம் ரூபா­வி­லி­ ருந்து 30 ஆயி­ரம் ரூபா­வுக்­கி­டை­யி­லான தொகையே கேட்­கப்­ப­டும் அள­வுக்கு நிலைமை உள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

கடந்த வரு­டம் சுமார் 75 ஆயி­ரம் ரூபா­வுக்கு ஏலம் கேட்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு