SuperTopAds

அதியுச்ச பொலிஸ், இராணுவ பாதுகாப்புக்குள் நல்லுாா்..! காலை 10 மணியுடன் சகல வீதிகளும் மூடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
அதியுச்ச பொலிஸ், இராணுவ பாதுகாப்புக்குள் நல்லுாா்..! காலை 10 மணியுடன் சகல வீதிகளும் மூடப்பட்டது..

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லுாா் ஆலயத்தை சூழ இராணுவம், பொலிஸாா் இணைந்து அதியுச்ச பாதுகாப்பை வழங்கிவருகின்றனா். 

ஆலயத்திற்கு செல்லும் சகல பிரதான வீதிகளும் மூடப்பட்டிருப்பதுடன், பொலிஸாா், இராணுவம் இணைந்து மூடப்பட்ட வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றனா். அதேபோல் ஆலய வளாகத்திலும் சீருடைய மற்றம் ஆயுதங்களுடன்

பெருமளவு பொலிஸாா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­கள் உடற் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­ வர் என்­ப­து­டன், அந்­தப் பிர­தே­சம் முழு­மை­யான சோத­னைக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அதற்­கான முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் நேற்­றுப் பொலி­ஸா­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­ டுள்­ளது. சோத­னைக் கூடங்­க­ளும் பொருத்­தப்­பட்­டுள்­ளது. ஆல­யச் சூழல் பாது­காப்பு நட­வ­டிக்­ கைக்­கா­கப் பொலி­ஸார் இன்று காலை 10 மணி முதல்

 கட­மை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.