என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறாா்கள்..! காடழிப்புக்கு வெள்ளையடிக்கிறாா் சாந்தி..
தோ்தலை இலக்காக கொண்டு மிக பொய்யான பரப்புரைகள் இடம்பெறவதாகவும், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறியுள்ளாா்.
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் அன்னதான மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரி வித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
இந்த ஆண்டு ‘கம்பரெலிய’ என்ற அரச நிதித் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை விட அமைச் சுக்கள் ஊடாக 9 கோடி ரூபா நிதியை மக்களின்
அபிவிருத்திக்காக நான் பெற்றுக் கொடுத்துள்ளேன். மக்களின் அபிவிருத்திக்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றை, இருப்புக் களை மாற்றி அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.
அதுபோன்ற பல நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கியுள்ளோம். எங்கள் மத, கலை, கலா சார தைப் பாதுகாத்து அடுத்து சந்ததிக்குக் கொடுக்கவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது– என் றார்.