மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு..! போலி ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதா..?

ஆசிரியர் - Editor I
மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு..! போலி ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதா..?

மணிவண்ணன் வழக்கில்  மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவையா என்பதனை  கண்டறியும் நோக்கில் மேலும் 4 உத்தரவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபை உறுப்பினர் மணிவண்ணன் சபை எல்லைப் பரப்பிற்குள் வசிக்காத காரணத்தினால் அவருடைய உறுப்புறுமை செல்லுபடியற்றது என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மணிவண்ணனிற்கு இடைக்காலத் தடை 

பிறப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு இடம்பெற்று இறுதிக் கட்டத்தினையடைந்த நிலையில் தீர்ப்பிற்கான திகதியை தீர்மானிப்பதற்காக கடந்த மாதம் 30ம் திகதி குறிப்பிடப்பட்ட நிலையில் விசேடமாக 19ம் திகதி அமர்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு   

26ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாவட்டத்தில் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்மை உள்ளிட்ட   ஆவணத்தை ஆணைக்குழு சமர்ப்பிக்க வேண்டும். லீசிங் ஒப்பந்தம் எழுதிய சட்டத்தரணி மரியதாஸ் - மரிளிமடோனா 

தன்னிடம் உள்ள மூலப்பிரதியினை சத்தியக் கூற்றின் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோன்று வீட்டின் உரிமையாளரான பரமநாதன் - செந்தில்குமரன் தன்னிடம் உள்ள மூலப்பிரதியினை அனுப்பி வைக்க வேண்டும் 

என்பதோடு உறுதி முடிப்பாளரான சட்டத்தரணி கஜப்பிரியா - மாணிக்கவாசகர் தன் வசம் உள்ள உறுதியின் மூலப் பிரதியினை சத்தியக் கூற்றின் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். எனவும் கட்டளையிடப்பட்டது.

குறித்த வழக்கில் மனுதாரர் சார்பில்   ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி நிரான் அங்கிற்றல்  ஆகியோரும் எதிர் மனுதார்ர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி விஜித்சிங்கும் ஆயராகினர்.

குறித்த வழக்கினை நீதியரசர்களான யசந்த கொதாகொட மற்றும்  உதயசேகர ஆகியோர்  இம் மாதம் 26ம் திகதிக்கு  ஒத்தி வைத்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு