ஆனைக்கோட்டை- வட்டுக்கோட்டை இடையில் வழிப்பறி கொள்ளையா்கள் அட்டகாசம் அதிகாிப்பு..! பொலிஸாா் அசமந்தம்.
யாழ்.வழுக்கையாறு பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகாித்துள்ளதால் அந்த பதியூடாக பயணிப்பதற்கு மக்கள் அச்சம் தொிவிக்கின்றனா்.
கொள்ளையர்கள் வீதியால் செல்பவர்களை வழிமறித்து, நிறுத்தி பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை தனிமையில் வந்த பெண்ணொருவரின்
தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன அறுத்துச் செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், ஆனைக் கோட்டைச் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்திவரை செல்லும் வீதியில்
உள்ள வழுக்கையாற்றுப் பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக வழிப்பறிக்கொள்ளைகள் இடம் பெறுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மானிப் பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தபோதும், இழந்த நகைகளையோ, பணத்தையோ?
காவல்துறையினர் மீட்டுக்கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அத்துடன் குறித்த வீதியில் கொள்ளையர்கள் உலாவுகின்றனர்.
மக்கள் அந்த வீதியால் செல்வதற்கு அஞ்சுகின்றனர் என்று தெரிவிக்கப்படும்போது, அந்த வீதி யில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலோ,
அல்லது மக்களுக்கான பாதுகாப்பிலோ காவல்துறையினர் ஈடுபடுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.கொள்ளையர்கள் நேற்றுமுன்தினம்
வட்டுக்கோட்டைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் பயணித்த பெண்ணை துரத்திச் சென்று அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலியை
அறுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண்ணின் கழுத்துப் பகுதி காயங்களுக்கு உள்ளானது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மேலங்கி, கையுறை, முகத்தை மூடிய தலைக்கவசம் என்பவற்றை அணிந்திருந்திருந்தனர். அந்த வீதியால் அங்கும் இங்கும் செல்கின்றனர்.
தனிமையில், உதவியின்றி வருபவர்களை அவதானித்து அவர்கள் தங்களுடைய கைவரிசைக் காட்ட முற்படுகின்றனர்.
இதனால் நவாலி வீதியால் பயணிப்பதற்கு அச்சம் ஏற்படுகிறது. நவாலி வீதியில் இடம்பெறும் இந்தச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்காதுவிடின் காலப்போக்கில் உயிராபத்துக்களும் ஏற்படக்கூடும் – என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.