நல்லுாா் கந்தனுக்கு உற்சபம்..! கட்டாக்காலி நாய்களுக்கு நலவாழ்வு..
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் நடமாடும் கட்டாக்காலி நாய்களை மாநகர சபை ஊழியர்கள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் திருவிழாவின்போது கூடும் லட்சக் கணக்கான பக்தர்களின் நலன் கருதி கட்டாலி நாய்கள் பிடிக்கப்பட்டு இயக்கச்சியில் உள்ள நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பப்படுகின்றது.
கட்டாக்காலி நாய்கள் இயக்கச்சியில் பராமரிக்கப்படாதபோதும் ஆலயத்தில் கூடும் பக்தரகளின் நன்மைகருதி இம்முறை ஏற்பதாக காப்பக ஏற்பாட்டாளா் ஆறு திருமுருகன் ஆலய ஏற்பாட்டுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதேநேரம் ஆலய சூழல் மட்டுமன்றி மாநகர எல்லைப் பகுதி முழுமையாக நடமாடும் ஆயிரக் கணக்கான நாய்களையும் பிடிப்பதற்கு மாநகர சபையினர் முன்வர வேண்டும் என மாநகர சபை வரி இறுப்பாளர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.