கட்டுவன்- மயிலிட்டி வீதி ஊடாக பலாலி விமான நிலையத்திற்கான புதிய வீதி காப்பெற் வீதியாக மாறுகிறது..
பலாலி விமான நிலையம் துாிதகதியில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் நிலையில் விமான நிலையத்திற்கான வீதி தெல்லிப்பழை சந்தியிலிருந்து கட்டுவன்- மயிலிட்டி வீதி ஊடாக அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வீதி காப்பெட் வீதியாக மாற்றும் பணிகள் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது அளவுப் பணிகள் இடம்பெறுகின்றன. கட்டுவன் - மயிலிட்டி வீதி (B-171) இதில் விமான நிலைய நுழைவாயில் அமையும்.