நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா..! மாநகர முதல்வர் முக்கிய அறிவித்தல்.

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா..! மாநகர முதல்வர் முக்கிய அறிவித்தல்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமா கவுள்ள நிலையில் விசேட ஒழுங்குகள் குறித்த முக் கிய விடயங்களை யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் அறிவித்துள்ளார்.

உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வீதித்தடையின் போது வாகன போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆலய உற்சவ காலத்தில் சாதாரண காவடிகள் பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும். அதே நேரம் இம் முறை ஆலயத்துக்கு வரும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும்.

அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற செய்யுமாறு அடியார்கள் அனைவருக்கும் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு