மகாநாயக்க தேரா்களே எல்லாவற்றுக்கும் தடை..! இல்லாவிட்டால் செய்திருப்போம் என்கிறாா் மாவை..

ஆசிரியர் - Editor I
மகாநாயக்க தேரா்களே எல்லாவற்றுக்கும் தடை..! இல்லாவிட்டால் செய்திருப்போம் என்கிறாா் மாவை..

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என பாராளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 1253 உள்வாரி படடதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது,

நாட்டில் இரண்டு தேசியக் கடசிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது.இந்த அரசின் ஊடாக பல வேலைத்திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த அரசில் அங்கம் வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த தரப்புடனும் கலந்தாலோசிக்காது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை திருட்டுத் தனமாக பிரதமராக்கினார்.

அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டார்.இதனால் பல வேலைத்திட்ட்ங்கள் தடைப்பட்ட்ன.அதிலும் முக்கியமாக இனப்பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பு பின்னோக்கி நகர்ந்தது.

அதுமட்டுமல்லாது மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்புக்கு முழுக்க முழுக்க தடையாக இருந்தனர். இதனாலேயே அரசியலமைப்பு உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன.வேலை வாய்ப்பு,காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதம் ஆகியுள்ளன.

இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எபோபோதோ கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது.

எனினும் தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான்.

மேலும் ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தை கலைத்தார்.இதனாலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் தடைப்பட்ட்ன.

பின்னர் நாம் அரசுக்கு எதிராக நடந்த சூழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தோம் சர்வதேச நாடுகள் பலவும் குரல் கொடுத்தன. 

இந்த அரசு தொடரன்டகாமையினாலேயே உங்களுக்கான நியமனங்கள் இப்போதவாது வழங்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில வேலை வாய்ப்புக்கள் கிடைக்காமையினால் 

பலர் போராடி வருகின்றனர்.பலரது வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளன.பலர் திருமண வாழ்க்கையில் இணைய முடியாமல் இருக்கின்றனர். 

நீண்டகாலமாக வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தமையினால் அவர்கள் நியமனங்களில் வயது பிரச்சனையை எதிர் கொண்டனர். 

இதனால் நாம் பிரதமருடன் பேசி வயதெல்லையை அதிகரிக்க கோரினோம்.அதன் படி வயதெல்லையும் அதிகரிக்கப்பட்ட்து.

இதனால் தற்போதைய நியமனத்தில் அவ்வாறான பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு நியமனம் கிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு