SuperTopAds

அரசாங்க கடன்திட்டத்தை பயன்படுத்தி பாாிய நிதிமோசடி..!

ஆசிரியர் - Editor I
அரசாங்க கடன்திட்டத்தை பயன்படுத்தி பாாிய நிதிமோசடி..!

நிதி அமைச்சினால் வழங்கப்படும் என்டபிறைசஸ் சிறீலங்கா கடன் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி பாாிய மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு நிதி அமைச்சு கேட்டுள்ளது. 

முயற்சியான்மையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தின் பெயரில் இவ்வாறு மோசடிகள் இடம்பெற்று வருவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களிடம், கடனுக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என அறிவித்து, கடன் பெற்றுக்கொள்ள கடன் தொகையில் ஒரு வீதத்தை செலுத்துமாறு கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் ஓர் கும்பல் இவ்வாறு நிதி அமைச்சின் கடிதத் தலைப்புக்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி, கடன் பெற்று கொள்ள உத்தேசித்துள்ளவர்களை ஏமாற்றுவதாக நிதி அமைச்சிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் தொடர்பிலான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை மட்டுமே நிதி அமைச்சு மேற்கொள்வதாகவும், வங்கிகளின் ஊடாகவே கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, கடன் பெற்றுக்கொள்வதற்காக எவரும், எந்தவொரு தொகை பணத்தையும் நிதி அமைச்சிற்கோ அதன் பெயரில் தோன்றும் நபர்களுக்கோ செலுத்த வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் பெயரைக் கூறிக் கொண்டு இந்த கடன் வழங்குவதற்காக எவரேனும் பணம் கேட்டால் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு நிதி அமைச்சினால் 

வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.