கைது செய்யப்படும் இந்திய மீனவா்களுக்காக உருகி வழியும் பெண் அரசியல்வாதிகள்..! காரணம் என்ன..?

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்படும் இந்திய மீனவா்களுக்காக உருகி வழியும் பெண் அரசியல்வாதிகள்..! காரணம் என்ன..?

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்படும் இந்திய மீனவா்களை முண்டியடித்துக் கொண்டு சிறைச்சாலைகளுக்கு சென்று பாா்ப்பதும் அவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதும் அண்மைய நாட்க  ளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அண்மைக்காலமாக இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்கள் அத்துமீறி நுழையும் சம்பங்கள் அதிகாித்து காணப்படுகின்றது. இந்நிலையில் அத்துமீறும் இந்திய மீனவா்களை கடற்படையினா் தொடா்ச்சியாக கைது செய்து வருகின்றனா். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவா்களை உள்ளுராட்சி சபை உறுப்பினா்கள் தொடக்கம், 

முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் வரை குறிப்பாக பெண் உறுப்பினா்கள் சிறைச்சா லைகளில் சந்திப்பதுடன், அவா்களுடைய விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுக்கதாக கூறுகின்றனா். இது இதுவரை இல்லாத ஒரு வழக்கமாக காணப்படுவதுடன், அண்மையில் முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன்

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை சந்தித்து பேசினாா். இதனை தொடா்ந்து இன்றைய தினம் மன்னாா் பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை உள்ளுராட்சி மன்றத்தின் உறுப்பினா்கள் 3 போ் (பெண்கள்) வவுனியா சிறைச்சாலையில் சந்தித்து கலந்து ரையாடியுள்ளனா். இந்நலையில் இதன் பின்னணி என்ன?

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இந்திய மீனவா்களுக்காக இவா்கள் துடிக்கவேண்டிய காரணம் என்ன? என இயல்பான கேள்வி எழுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு