இரண்டு அரச நியமனங்களுக்கு ஆசைப்பட்ட 104 பட்டதாாிகள் சிக்கினா்..! இரு நியமனங்களையும் இழந்து, கைது செய்யப்படும் அபாயம்.

ஆசிரியர் - Editor I
இரண்டு அரச நியமனங்களுக்கு ஆசைப்பட்ட 104 பட்டதாாிகள் சிக்கினா்..! இரு நியமனங்களையும் இழந்து, கைது செய்யப்படும் அபாயம்.

ஏற்கனவே அரச பணியிலிருந்து கொண்டு வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனத்தில் உள்வாங்கப்பட்ட 104 பேர் நேற்று வரையில் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேலையில்லாப் பட்டதாரிகளிற்கான நியமனம் தற்போது வழங்கப்படும் நிலையில் இன்னமும் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களே அதிகம் உள்வாங்கப்பட்டு பட்டதாரி நியமனமும் வழங்கப்பட்டுள்ளதால் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக தற்போதும் 

சந்தர்ப்பம் கிடைக்காத வடக்கு மாகாண பட்டதாரிகள் சுட்டிக்காட்டுவதோடு கடந்த இரு ஆண்டுகளாக மாகாண சபை மத்திய அரசுகளின் ஊடாக நியமனம் பெற்ற பலர் தமக்கு பிற மாவட்டங்களில் நியமனம் கிடைத்தமையினால் அச் சந்தர்ப்பத்தினை கைவிட்டு புதிய நியமனத்தின் ஊடாக அண்மையில் நியமனம் பெற முயல்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகள் சுமத்தும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வடக்கு மாகாண சபையால் கடந்த காலத்தில் நியமனம் வழங்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் மாவட்டச் செயலாளர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனத் தொிவித்தார்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில். யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்னமும் சுமார் 2 ஆயிரத்து 750 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளது. 

அந்த தேவையினையும் நிவர்த்தி செய்ய முயற்சிக்கப்படும் நிலையில் இவ்வாறு ஒன்றிற்கும் மேற்பட்ட சந்தர்ப்பத்தை பெறுவதன் மூலம் பல பட்டதாரிகளை வீதியில் நிற்பதற்கு காரணமாகவும் அமைகின்றது. அதேநேரம் ஓர் அரச உத்தியோகத்தர் ஒரு பணியில் இருந்த சமயம் இன்னுமோர். அரச நியமனத்தை பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் 

அவ்வாறு முன்பு பணியாற்றும் அரச தொழிலை மறைத்து புதிய தொழிலை பெற்றமை கண்டறியப்படும் எக் காலத்திலும் உடனடியாக பதவி இழப்பார். இவ்வாறு பதவி இழக்கும் சமயம் இரு பதவிகளுமே இழக்கப்படும் அத்துடன் முதல் பணியாற்றிய காலத்தில் பெற்ற அரச சம்பளம் முழுவதும் மீளச் செலுத்தியே ஆக வேண்டும். 

அல்லது சிறைகூடச் செல்ல நேரிடலாம். பட்டதாரிகள் க.பொ. த உயர்தரத்துடன் அரச நியமனம் பெற்று தற்போது பட்டதாரி நியமனம் என்றோ அல்லது பட்டதாரி நியமனத்தின் கீழ் மாகாண சபை அல்லது வேறு திணைக்களங்களில் நியமனம் கிடைத்து அவை பிற மாவட்ட நியமனம் என்பதனால் தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனைவதோ 

உங்கள் அரச தொழிலை இழக்கவே வழி செய்யும். அவ்வாறு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே அரச நியமனத்தில் உள்ளவர்களின் பெயர் தற்போதைய பட்டதாரி நியமனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படுகின்றது. அவ்வாறு எமது ஆய்வின் மூலம் யாழ்ப்பாணத்தில் இதுவரை 104 பேர் கண்டறியப் பட்டுள்ளனர். 

இதே நேரம் தற்போதைய நியமனம் பெறும் பட்டதாரிகளிடம் இதுவரையில் எந்த இடத்திலும் எந்த அரச பணியிலும் இல்லை என்ற உறுதிமொழி பெறப்படும். அவ்வாறு பணியில் இருப்பதாக கண்டறிந்தால் உங்கள் உறுதியுரையின் பிகாரம் இரு பதவிகளவயும் இழக்கும் சமயம் ஏற்படும் அசௌகரியங்களிற்கும் குறித்த பட்டதாரிகளே பொறுப்பேற்க 

வேண்டிய நிலமை ஏற்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு