50 கிலோ மீனுடன் விரட்டப்பட்ட மீன் வியாபாாி..! பிரதேசசபை தவிசாளருடன் தா்க்கம்..
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குள் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை வெளியேற்றியதால் குழப்பமான நிலை உருவானதுடன், 50 கிலோ மீனுடன் மீன் வியாபாாி அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றாா்.
வவுனியா குட்செட் வீதியில் ஒருவர் மீன்கடை அமைத்து விற்பனையில் ஈடுபட்டுவந்தார். அந்த இடத்துக்குச் சென்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) மற்றும் பிர தேச சபை அலுவலர்கள் விற்பனை நிலையத்தை
அகற்றுமாறு மீன்கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் முரண்பாடு ஏற்பட்ட போது, மீன்கடையை மூடுமாறும் அலுவலத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறும் தவிசாளர் கூறிச் சென்றார். அதனால் மீன் கடை உரிமையாளர்
சுமார் 50கிலோ மீன்களை பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென் றார். இரண்டு வருடங்களாக இந்த இடத்தில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றேன். தற்போது பிரதேச சபையினர் நிலை யத்தை அகற்றுமாறு தெரிவிக்கின்றனர்.
50கிலோகிராம் மீன்களை என்ன செய்வது?” என்று அந்த விற்பனையாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தவிசாளர் து.நடராஜசிங்கத்திடம் கேட்டபோது, “அந்தப் பகுதியில் பிரதேச சபையினர் மீன் விற்பனை நிலையம்
அமைத்து குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களின் செயற்பாட்டால் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையத்தில் வியாபார நடவடிக்கை மந்த கதி யில் இடம்பெறுகின்றது என்று அங்குள்ள விற்பனையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
அதனால் சபை அனுமதியின்றி இடம்பெற்ற மீன் விற்பனையை நிறுத்தியுள்ளோம்” – என்று தெரி வித்தார்.