SuperTopAds

திருகோணமலை- கன்னியாவில் தமிழ் மக்களின் மனங்களை கவா்ந்த பிக்குவின் செயற்பாடு..!

ஆசிரியர் - Editor I
திருகோணமலை- கன்னியாவில் தமிழ் மக்களின் மனங்களை கவா்ந்த பிக்குவின் செயற்பாடு..!

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பூசை வழிபாடுக ள் இடம்பெற்றுவரும் நிலையில் பௌத்த பிக்கு ஒருவா் இந்து சமய தலைவா்களை சந்தித்து நாக  ரிகமாக பேசியுள்ளதுடன், பிரசாதத்தையும் பெற்றுள்ளாா். 

தமிழர் வரலாற்றின் படி, பத்துத் தலை இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்ய உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த ஏழு வெந்நீரூற்று உருவாகியதாகவும் ஐதீகம் உண்டு.

இத்தனை பெருமை கொண்ட கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் பிதிர் கடன் செலுத்துவதற்காக இந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இதேவேளை கடந்த சில காலங்களாக கன்னியா வெந்நீரூற்று பகுதி சர்ச்சைக்குரிய 

மற்றும் பேசு பொருளாக காணப்பட்டு வருகிறது.இந்து ஆலயம் உள்ள மற்றும் தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் பௌத்த பிக்கு ஒருவரால் மேற்கொள்ளப்பட்டமையே இதற்கான காரணமாக காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்துக்கள் தம்முடைய வழிபாடுகளை கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாத வகையில் அப்பகுதியில் பௌத்தர்கள் 

தமது வழிபாடுகளை மேற்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் பௌத்த பிக்கு ஒருவர் கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்திற்கு சென்று இந்து மதகுருமார்களுடன் நல்லிணக்க முறையில் கலந்துரையாடல் மேற்கொண்டு 

பின் பிரசாதத்தையும் வாங்கியுள்ளார்.குறித்த பௌத்த பிக்குவின் இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையில் வெறுப்புக்களை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு தக்க பாடமாக அமையும் எனவும், ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றமானது தொடர 

விரும்புவதாகவும் அங்கிருக்கும் பக்தர்கள் கூறுகின்றனர்.