சாவகச்சோி மக்களுக்கு எச்சாிக்கை..! இருநாள் காய்ச்சல் இருந்தால் உடனே வைத்தியசாலைக்கு செல்லுங்கள்..
சாவகச்சோி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகாித்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாாி பணியகம் அறிவித்துள்ளது.
தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மையில் பெய்த மழையை அடுத்து டெங்கு குடம்பிகள் நுளம் பாக மாறி தாக்கும் அபாயம் காணப்படுகிறது. தென்மராட்சி பிரதேசத்தில் நாவற்குழி கிழக்கு, மந்துவில், மட்டுவில், சாவகச்சேரி நகரம் போன்ற பிரிவுகளில்
தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத னையடுத்து மத்தி சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு அலகினர் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகப் பிரிவை டெங்கு அபாயப் பிரதேசமாக அறிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளால் குறைவடைந்திருந்த டெங்கு மீண்டும் உருவாகாமல் தடுக்கப் பொது மக்கள் தமது குடியிருப்புகள் மற்றும் காணிகளைத் துப்புரவாக வைத்திருக்குமாறும், டெங்கு நுளம்பு உற்பத்தியாகும்
தண்ணீர் ஏந்தும் பொருள்கள் காணப்படின் உடனடியாக அப்புறப்படுத்தி நுளம்பு உற்பத்தியாவ தைத் தடுக்குமாறும் அறிவித்துள்ளனர்.