500 ஏக்கா் சவுக்கு காடு சமுதாய காடாக அறிவிக்கப்பட்டது..! திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி..
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள 500 ஏக்கா் சவுக்கங்காட்டை சமுதாக காடாக அறிவிக் குமாறு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மணற்காட்டில் உள்ள சவுக்கங்காடு புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. இங்கே அடிக்கடி தீ பரவுகின் றது. அவ்வாறு பரவும் தீ கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியால்
கட்டுப்படுத்தப்படுகின்றது. பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் காடு இருந்தாலும், அதை கிராம அபிவிருத்திச் சங்கம்தான் பராமரித்து, பாதுகாத்து வருகிறது.
எனவே இந்த இடத்தை சமுதாயக் காடாக அறிவிக்க வேண்டும் என்று பிரதேச செயலர் கனகேஸ் வரன் வலியுறுத்தினார். இந்தக் காடு 30க்கும் மேற்பட்ட தடவைகள் தீ ஏற்பட்டதால்
பெரும் செலவும் ஏற்பட்டது. இதேநேரம் இரவோடு இரவாக வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்று பெயர்ப் பலகை போடப்பட்டது.
தீ பரவினால் கட்டுப்படுத்துவது மாவட்டச் செயலகமும் உள்ளூராட்சி திணைக்களமுமே.அவ்வா றிருக்க திணைக்களம் உரிமை கோருவதாக இடர் முகாமைத்துவப் பிரிவின்
அதிகாரி ச.ரவி தெரிவித்தார். குறித்த நிலம் தற்போது வரையில் பிரதேச செயலருக்குச் சொந்த மான நிலம்தான். அது காடு என்பதற்கான எந்த அரசிதழ் அறிவித்தலும் கிடையாது.
திருட்டுத்தனமாக பலகை நடப்பட்டுள்ளது என்று மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்தார். இது தொடர்பாக ஆராய்ந்த இணைத்தலைமைகள் அந்தக் காட்டை சமுதாயக் காடாக
அறிவிக்கத் தீர்மானம் நிறைவேற்றினர். பெயர்ப்பலகையை அங்கிருந்து அகற்றிவிடுமாறும் பிர தேச செயலருக்கு ஒருங்கிணைப்புக் குழு கட்டளையிட்டது.