பணம் கட்ட வழியில்லாவிட்டால் படுக்க அழைக்கிறாா்கள்..! நுண்கடன் நிறுவனங்கள் அட்டகாசம்..
மக்களிடம் நுண்கடன் தொடா்பான அறிவில்லாமையை பயன்படுத்தி நுண்கடன் நிறுவனங்கள் மக்களை அச்சுறுத் துவதுடன், பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகிறது. ஆகவே நுண்கடன் தொடா்பில் பொதுவான தீா்மானம் எடுக்கப்படவேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலா் கூறியுள்ளாா்.
நேற்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவா் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிரு க்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
கரவெட்டிப் பிரதேசத்தில் நுண்நிதி நிறுவனங்களால 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன. இரண்டு குடும் பங்களில் தாய், தந்தை ஆகியவர்கள் தலைமறைவாகியதால் அவர்களுடைய பிள்ளைகள் பாட்டி, அல்லது உறவி னர்களுடன் வாழ்கின்றனர். உயிர் மாய்ப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில்
பொதுவான தீர்மானம் ஒன்று எடுத்தால்தான் சிறந்தது. அண்மையில் நுண்நிதி நிறுவனங்களை அழைத்து கலந்து ரையாடினோம். இந்த நிதி வழங்கல், கடன்வழங்கல் தொடர்பாக எந்தவொரு தெளிவும் மக்களுக்கு வழங்கப்பட வில்லை. எனவே கிராம அலுவலகரின் அனுமதியின்றி எந்தக் கடன்களையும் வழங்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
தவறான கருத்துக்களை முன்வைத்து, பொய்யான காரணங்களைக் கூறித்தான் கடன்களை எடுக்கின்றார்கள். இந்த விடயங்கள் சீர்செய்யப்படவில்லை என்றால் நிச்சயமாக இந்த கடன்களைப் பெறும் குடும்பங்களுக்கிடையில் பாதிப்புக்கள் ஏற்படும். இப்போது 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் 32 வயதுக்குட் பட்டவர்கள். இவை எல்லாவற்றுக்கும்
முக்கிய காரணம் இந்த நுண்நிதிதான். நுண்நிதியை வழங்குவதில் தவறில்லை. ஆனால் அதற்குச் சரியான விளக் கம், அல்லது ஆவணம், தெளிவுகள் வழங்கப்படவேண்டும். கையெழுத்துக்களை வாங்கிவிட்டு காசைக் கொடுத்து விட்டுப்போகின்றார்கள். சிலர் அடாத்தான முறையில் கடனைப் பெறுவதும், கடனுக்குப் பதிலாக பாலியல் இலஞ் சங்களைக் கோருவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இது தொடர்பாகத் தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும்.- என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்ததாவது.
வங்கிகளில் கடன் பெறச் சென்றால் இன்னுமோர் வங்கியில் கடன் பெற்றிருப்பின் இரண்டாவது கடனுக்கு அனுமதி மறுக்கப்படும். இதனால் அதிக நெருக்கடியில் இருந்து பயணாளி தப்பிக்கின்றார். ஆனால் நுண் நிதி நிறுவனங் களோ ஒருவர் ஏற்கனவே இரு இடத்தில் கடன் பெற்று 3ஆவது தடவை கடன் கோரினாலும் வழங்குகின்றனர். அதை எவ்வாறு மீளச் செலுத்துவார் என்பது தொடர்பில் ஆராய்வது கிடையாது.
நிறுவனங்கள் தமது பணத்தை எப்படியும் அறவிடுவோம்?, அதனால் எமக்குரிய இலாபம் கிடைக்கும் என்பதில் மட் டுமே குறியாக உள்ளனர். இதனால் ஒரு பயனாளி ஓர் நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில் வேறு நிறுவனத்தி லும் பெறுவாராயின், அதை அந்த நிறுவனம் கோர முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும்.-என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும், இணைத் தலைவருமான மாவை சோ. சேனாதிராஜா தெரிவித்ததாவது.
வடக்கு, கிழக்கில் அதிக பெண் தலமைத்துவக் குடும்பங்கள் வாழ்வதால் வருமானம் இன்றி நுண்கடனைப் பெற்று நெருக்கடிகளை சந்திக்கின்றனர். இது தொடர்பாக நிதி அமைச்சர், தலைமை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நுண் கடனை நீக்க கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நீக்க ஏற்பாடு இடம்பெற்ற சமயம் அதேபோன்று தெற்பிலும் 16 ஆயிரம் பேர்
பாதிப்படைந்திருந்தமையால் நாடு பூராகவும் 40 ஆயிரம் பேரின் நுண் கடன் நீக்கப்பட்டது. அவ்வாறு நீக்கும்போது பலர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களிலும் சிலர் ஆடம்பரத் தேவைக்காக பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப் பட்ட நிலையில் தீர்வு வழங்கப்பட்டது. அதன் பின்பு தற்போது மீண்டும் அதே நெருக்கடி என்பதனால் உடனடியாக நிதி அமைச்சரன் கவனத்துகு்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும்.-என்றார்.