நாடகம் முடிந்தது. மீண்டும் அமைச்சா்கள்..!
கடந்த மாதம் ஜுன் 3 ஆம் திகதி அமைச்சு பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று மீள அமைச்சு பதவியேற்றுள்ளனர்.
இதில் சற்று முன்னர் ஜனாதிபதி முன் Rishad Bathiudeen, Rauff Hakeem, Ameer Ali & Abdullah Maharoof ஆகியோர் சத்தியபிரமாணம் மேற்கொண்டு அமைச்சு பதவி ஏற்றுள்ளனர்.
றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ACMCயின் MPகள் தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றனர். பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன இராஜாங்க அமைச்சரானார்.
இதேவேளை கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர், ஜுன் 19 பதவியேற்றமையும் குறிப்பிடத்தக்கது.