SuperTopAds

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் 5ஜீ சிக்கல்..! மக்களை முட்டாளாக்க சிலா் முயற்சிப்பதாயும் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் 5ஜீ சிக்கல்..! மக்களை முட்டாளாக்க சிலா் முயற்சிப்பதாயும் குற்றச்சாட்டு..

யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போல்ஸ் பல இடங்களில் அமைக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.மாந கரசபை எல்லைக்குள் மட்டும் அவை நடப்படுவதாகவும், 5 ஜீ தொலை தொடா்பு அலைக்கற்றைக ள் அதில் பொருத்தப்படவுள்ளதாகவும் சிலா் கூறுகின்றனா். 

மக்கள் போராட்டங்களையும் அவா்கள் நடத்துகிறாா்கள் ஆனல் எமது மக்கள் முடாள்கள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூடடம் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ் மாவடட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஸ்மாட் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும்தான் இவை அமைக்கப்பட்டு வருகின்றது.என்ற தோற்றப்பாட்டினை இங்குள்ள சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இலங்கையிலேயே இல்லாத 5ஜி தொழில்நுட்பம் 

யாழ்ப்பாணத்தில் மட்டும் வரப்போகின்றது என போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள் எமது மக்களை முட்டாள்கள் என்று நினைத்தனர் போல உள்ளது. ஆனால் எமது மக்கள் அனைத்தையும் நன்கு அறிவார்கள் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகர சபையினால் 5 ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நாம் அவ்வாறான உடன்படிக்கை எவற்றையும் செய்யவில்லை.

நாம் ஸ்மாட் கோபுரத்தின் ஊடாக மின்விளக்கு, கண்காணிப்புக் கமரா போன்ற சில அத்தியாவசிய விடயங்கள் தொடர்பிலேயே பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளியில் உள்ள சிலர் கூறுவது போன்று நாம் 5ஜி வலையமைப்பு 

பொருத்த எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை என்றார்.