பலாலி விமான நிலையம் தொடா்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீா்மானம்..!

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையம் தொடா்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீா்மானம்..!

அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் பலாலி விமான நிலையத்தில் இந்திய உபகண்டத்தை சேர்ந்த பிராந்திய விமான சேவைகளை உள்வாங்க கூடியதாக இருக்கும் எனவும் 

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் இச் சேவைகளை பெற முடியும் எனவும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்தார்.

விமான நிலைய அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபாவை இலங்கை செலவிடுகின்றது. ஓடுபாதை சுமார் 70 பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்தை உள்வாங்க கூடியதாக இருக்கும் 

சிறப்பான முனையம் மற்றும் தர்காலிகவிமான பயணக்கட்டுப்பாட்டுக் கோபுரம் என்பவும் அமைக்கப்படுகின்றது முதலாவது விமான சேவை செப்ரெம்பரில் 

இடம்பெறும் என அவர் கூறினார். ஏ.320 பரிமாணம் கொண்ட விமானத்தை உள்வாங்க கூடிய  3800 மீற்றர் ஓடுபாதை நிர்மாணிக்கப்படுகிறது. 

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய பாதையை நிர்மாணித்து வருகிறது என்றார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான கட்டுவன்- மயிலிட்டி, கட்டுவன்- மல்லாகம் வீதியையும் மாரி மழை தொடங்கமுதல் காப்பெட் வீதியாக உடன் புனரமையுங்கள். 

காணி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து வீதி விடுவித்து 2 வருடமாகிறது இதுவரைக்கும் வீதி திருத்து வேலை தொடங்கவில்லை பாரிய குன்றும் குழியுமாக உள்ளது.

தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானத்துக்கு கல், மணல் ஏற்றிய பல டிப்பர்கள் தொடர்ச்சியாக இவ்வீதியால் பயணிக்கிறது கிடங்கும் புழுதிமயமாக மாறிவருகிறது. 

எனவே அதிகாரிகள் உடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு