ஓமந்தை- காங்கேசன்துறை இடையில் புகைரதங்கள் மணிக்கு 40 கிலோ மீற்றா் வேகத்திலேயே இனி பயணிக்கும்..

ஆசிரியர் - Editor I
ஓமந்தை- காங்கேசன்துறை இடையில் புகைரதங்கள் மணிக்கு 40 கிலோ மீற்றா் வேகத்திலேயே இனி பயணிக்கும்..

ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையில் மணிக்கு 40 கிலோ மீற்றா் வேகத்தில் பயணிக் கும் வகையில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீா்மானித்துள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதைகள் சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளமையினால், 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடிகிறது. இதன் காரணமாக பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றனர். 

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயிலின் பயண வேகத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்தினால் பயணங்கள் தாமதமாகும் என்பதனால் வேகத்தை குறைக்க முடியாதெனவும், 

பாதுகாப்பு கடவைகள் மற்றும் சமிக்ஞைகளை உரிய முறையில் பொருத்த வேண்டும் என சில தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் பல மனித உயிர்கள் உட்பட பெருமளவு 

மிருகங்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு