மக்கள் ஆணை வழங்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்..! கிழட்டு அரசியல் செய்யும் தேவை எனக்கில்லை..

ஆசிரியர் - Editor I
மக்கள் ஆணை வழங்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்..! கிழட்டு அரசியல் செய்யும் தேவை எனக்கில்லை..

இனப்பிரச்சினை தீா்வு விடயத்தில் 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் எதனையும் இந்தியா வழங்கப்போவதில்லை. அதன் காரணமாகவே இந்திய பிரதமா் நரேந்திரமோடி தமிழ்தேசிய கூட்டமைப்பினரை அழைக்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பும் சந்திப்பதற்கான முயச்சி களை எடுக்கவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சிய அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்க ண்டவாறு தெரிவித்த அவர், மேலும் அங்கு தெரிவிக்கையில், இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது தி ருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போதும் 

என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இதில் மாற்றங்கள் ஏற்படாது. அண்மையில் கூட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடா்பான இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து சென்றிருந்தபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கான ஏற்பாடுகளும் எவையும் நடைபெறவில்லை. அதற்கு காரணம் இந்தியா 13 திருத்தச் சட்த்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் 

மிக உறுதியாக உள்ளது. அதனாலேயே மோடியும் கூட்டமைப்பினரை சந்திகக அழைக்கவில்லை. இவர்களும் அங்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயங்குகின்றனர். நாம் அன்றிலிருந்து இன்றுவரை 13 ஆவது திருத்தச் சட்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றோம். இந்த நிலையிலேயே எமது கோரிக்கை  யதார்த்தமானது என்பதனால் , 

எமது கொள்கை பயனங்கள் சரியென தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கியுள்ளனர்.  இதேவேளை, தமிழ் மக்களி காணி விடு விப்பு,  ஒரு இலட்சம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை 6 மாதகாலத்திற்குள் எந்த தரப்பு நிறைவேற்றுவதாக உறுதிமொழி தருகின்றதோ 

அவர்களுக்கு எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவினை வழங்கும். மேலும், எந்த அரசானாலும் ஆட்சிக்கு வந்து ஆறு மாதக காலத்திற்குள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். தவறும் பட்சத்தில் அது ஆறின கஞ்சி பழைய கஞ்சி என்ற நிலையேற்படும்.  இங்குள்ள அரசியல் வாதிகள் மக்களுக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்காது, 

தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்கும் நோக்குடன் சாத்தியமில்லாத பொய்யா வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அது நிறைவேற்றப்படாத சந்தர்ப்பங்களில் கிழட்டு அரசியல் வாதிகள், சிங்கள அரசுகள் தம்மை ஏமாற்றிவிட்டது என மக்கள் மத்தியல் நாடகமாடுகின்றனர். 

அரசிற்கு இத்தனை வருடங்களாக முண்டுகொடுத்துவிட்டு தேர்தல் நெருங்குகின்றது என்றவுட் 72 நிமடங்கள் நின்று உரையாற்றியதாக முழக்கமிடுகின்றனர்.  ஆனால் அவர்கள் பாராளுமன்றத்திலே பதிலளகிக்க வேண்டிய பிரதமர், அமைச்சர்கள் இல்லாத  வெற்றுக் கதிரைகளுக்கே உரையாற்றினர். 72 நிமிடங்கள் பேசியமையானது, 

தமிழ் மக்களுக்கு 72 வருடமாக செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடுவதற்கோ தெரியவில்லை. இதேவேளை நடைபெறவுள்ள தேர்தல்களில், தமிழ் மக்கள் எனது கட்சிக்கு ஆதரவினை தராத பட்சத்தில் ஓய்வு பெறலாம் என சிந்திக்கின்றேன். ஏனெனில் மக்கள் ஆணை வழங்வில்லை என்றால் எனக்கு வலிந்து கிழட்டு அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு