மாவை கந்தன் முக உத்தர தோில்..

ஆசிரியர் - Editor I
மாவை கந்தன் முக உத்தர தோில்..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆறுமுகபெருமானுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  முகஉத்தர சித்திர தேர் வெள்ளோட்டம் இன்று 12.30 மணியளவில் பூசைகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

இந்த தேர் முன்­பி­ருந்த முக­உத்­தர தேரை விட இன்­னும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாக தேர் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அத்துடன் இதன் கலசத்தின் நிறை 65 கிலோவாகும்.

தேரினை யாழ்ப்பாணம் உடுவிலம்பதி நிதர்சன் சிற்பாலய அதிபர், விஸ்வபிரம்மஸ்ரீ சிற்பகலாரத்தினம், ஸ்தபதி, கந்தசாமி இளங்கோவன் (கோபி ஆச்சாரியார்) தலைமையில் அவர்தம் பஞ்சகிருத்திய பரிவாரர்கள். நிர்மாணித்துள்ளனர்.

இன்றைய வெள்ளோட்ட நிகழ்வில் தேரினை உருவாக்கிய ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் என்பவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், 

இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் , பிரதேச செயலர் ச.சிவசிறி, பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், முன்னாள் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, 

டக்ளஸ் தேவானந்தா என பல பக்த அடியார்களும் கலந்துகொண்டு இன்றைய மாவை கந்தனின் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதேவேளை 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் ஏனைய நான்கு தேர்­கள், 

சப்­ப­ரம், திரு­மஞ்­சம், கைலா­ய­வா­க­னம் என்­ப­வற்­று­டன் முற்­று­மு­ழு­தாக அழிக்­கப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு