சாமி இடம்கொடுத்தும். பூசாாி மறுக்கிறாா்..! கண்ணீா் வடிக்கும் முல்லைத்தீவு விவசாயிகள்..

ஆசிரியர் - Editor I
சாமி இடம்கொடுத்தும். பூசாாி மறுக்கிறாா்..! கண்ணீா் வடிக்கும் முல்லைத்தீவு விவசாயிகள்..

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் உள்ள நஞ்சுண்டகுளம் புனரமைப்பிற்கு 40 மில்லியன் ரூபா நிதி கிடைத்த நிலையில் ஜனாதிபதியிடமிருந்து அனுமதி பெற்று வழங்கியபோதும் வனவளத் திணைக்களம் அனுமதிக்க மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

விசுமடுப் பகுதியில் இளங்கோபுரம் , வள்ளுவர்புரம் , மாணிக்கபுரம் , தேராவில் உள்ளிட்ட 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் ஆயிரத்து 300 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவும் குளமான நஞ்சுண்டகுளத்தினை புனரமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் 

நீண்டகாலமாக விடுத்த கோரிக்கையின் பெயரில் எனது விசேட ஒதுக்கீட்டில. இருந்து 40 மில்லியன் ரூபாவினை குறித்த திட்டத்திற்காக ஒதுக்கி அமைச்சின் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு நிதி அனுமதி கிடைத்தது. இவ்வாறு கிடைத்த நிதியின் மூலம் 40 மீற்றர் அகலமும் 2.5 கிலோ மீற்றர் நீளமும் உடைய குளத்தின் அணைக்கட்டு 

புனரமைப்பு மேற்கொள்வதே திட்டத்தின் இலக்காகும். இருப்பினும் இவ்வாறு புனரமைக்க வேண்டிய குளக் கட்டுப் பிரதேசமானது யுத்தம் முடிவடைந்தும் 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் யுத்தம் இடம்பெற்றபோதும் 15 ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை. இதனால் இப் பகுதியில. அதிக மரம் வளர்ந்து காணப்படுவதனால் 

அவ் மரங்களை வெட்டி அகற்றியே ஆக வேண்டும் என்ற நிலமையே காணப்படுகின்றது. இவ் விடயம் வனவளத் திணைக்களத்தின் கவனத்திற்கு மாவட்டச் செயலாளர் கொண்டு சென்ற சமயம் அதற்கான அனுமதியினை வனவளத் திணைக்களம் வழங்கவில்லை. இதன் காரணமாக அந்த நிதியை விசேடமாக ஒதுக்கியவன் என்ற வகையில் 

குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு நானே நேரடியாக கொண்டு சென்றேன் அப்போது விடயத்தின் முக்கியம் கருதி குறித்த பணிக்கு அனுமதியினை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக பணிப்புரை விடுத்தார். இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளரது அனுமதிக் கடிதம் சகிதம் மாவட்டச் செயலாளர் மீண்டும் 

வனவளத் திணைக்களத்தோடு தொடர்பு கொண்டார். இதன்போது பிராந்திய அதிகார 10 மரம் தறிப்பதற்கும் மாவட்ட அதிகாரி 25 மரம் தறிப்பதற்குமே அனுமதியை வழங்க முடியும் ஆனால் இங்கே நூற்றுக் கணக்கான மரம் காணப்படுகின்றது. இதனை அனுமதிப்பதானால் அமைச்சின் செயலாளரினால் மட்டுமே முடியும் என தற்போது கூறப்படுகின்றது. 

இதனைப் பொறுப்பெடுத்து குறித்த அனுமதியினை பெற்று வழங்க திணைக்களம் தயாராக இல்லை. இப் பணிக்கான நிதி கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மாவட்டச் செயலகத்திற்கு கிடைத்தது. தற்போது 5 மாதமாக எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் குறித்த திட்டம் இடம்பெறாமலேயே போய்விடும் 

அதனால் குறித்த நிதியும் திரும்பிச் செல்லும் அபாயமே காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இருப்பினும் போரினால் பாதிக்கப்பட்டு மீளக் குடியமர்ந்தவர்கள் தொடர்பில் வனவளத் திணைக்களமோ கண்டுகொள்வதாக இல்லை. இதேநேரம் ஜனாதிபதியின் உத்தரவைக்கூட நிறைவேற்றாமை 

தொடர்பில் ஒரு கேள்வியும் இல்லை. இதேநேரம் இந்த நஞ்சுன்டகுளம் அபிவிருத்தி செய்யத் தடைபோடும் இந்த வனவளத் திணைக்களம் வவுனியா மாவட்டத்திலே அந்த மாவட்டச் செயலாளரினதோ அல்லது பிரதேச செயலாளரினதோ எந்தவிதமான அனுமதியும் இன்றி அந்த மாவட்டத்திலேயே வசிக்காத மக்களை இரகசியமாக குடியேற்றும் நோக்கில் 

கச்சல்சமனங்குளம் பகுதியிலே ஆயிரம் ஏக்கர் காடு அழிக்கப்படுகின்றது. ஆனால் இது அந்த திணைக்களத்தின் கண்களில் படவில்லையா அல்லது தமது இனத்தவர்களை இரகசியமாக குடியமர்த்த இடம்பெறும் பணி என்பதனால் அனுமதிக்கின்றனரா என்ற ஐயமும் எழுகின்றது. இதனால் வனவளத் திணைக்களம் என்பது 

தமிழர்களை அடக்கி ஒடுக்கவும் சிங்களவர்கள் என்றால் அநியாயமாகவும் எதனை செய்யவும் துணைபோகும் ஓர் அரச இயந்திரமாகவே காணப்படுகின்றது. என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு