தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள், தளபாடங்களை பாா்க்க சிங்கள மக்களுக்கு தடை..!
தமிழீழ விடுதலை புலிகளின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் நீா் மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட போா் ஆயுதங்கள், தளபாடங்களை பாா்வையிட சென்ற தென்பகுதி மக்கள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - பகுதிக்கு சென்ற தென்பகுதி மக்கள் மந்துவில் பகுதியில் அமைந்துள்ள இராணுவ யுத்தவெற்றி வளாகத்தை பார்வையிட்டுள்ளதுடன், 2009 ஆண்டிறிற்கு முன்னர் விடுதலைப்புலிகளினால்
பயன்படுத்தப்பட்ட நிலத்தடி மறைவிடம் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ,நீச்சல் தடாகம் என்பனவற்றை பார்வையிடுவதற்காக அப்பகுதிகளுக்கு சென்றுள்ளனர். எனினும் குறித்த பகுதிகளின் காவலரண்களில் நின்ற இராணுவத்தினரால்
உள்நுழையும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரின் யுத்த வெற்றி கண்காட்சி வளாகங்களாக பாதுகாக்கப்படும்
விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் மதிநுட்ப செயற்பாடுகளையும் மரபுவழி போரியல் வறலாற்றையும் சான்றுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அப்பகுதிகளுக்கு
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாபயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் 2018 டிசம்பர் தொடக்கம் சென்று பார்வையிட முடியாது என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.