சீ.வி.கே.சிவஞானம் ஆளுநருக்கு எழுதிய கடிதம்..! இருப்பதையும் பிடுங்காதீா்கள்..
சிறுபான்மை இனத்தவாின் உணா்வுகளையும், அதிகார பகிா்வு கோாிக்கையி னையும் புாிந்து கொண்ட ஒருவராக நானும், நாங்களும் நம்பியிருந்த அமைச்சா் ராஜித சேனாரத்ன, மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரத்தையும் பிடுங்கும் செயற்பாடு எதிா்க்கப்படாத ஒன்றா?
என அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ரி.சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்று வார் என்றும் இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்
விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவ ஞானம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத் தில், கடந்த இருபத்திநான்காம் திகதியும் இருபத்தைந்தாம் திகதியும் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட இனப் பிரச்சினைக் கான தீர்வு தொடர்பான எந்தவிதமான சாதகமான
சமிக்கைகளையும் தெரிவிக்காத அரச தரப்பின் ஓர் அங்கமாகவே சுகாதார அமைச்சரின் செயற்பாட்டை கவலையுடன் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று தெரிவித்துள்ள அவைத்தலைவர், இந்தப் பதவிக்கு மருத்துவ கலா நிதி ரி.சத்தியமூர்த்தியின் தகுதிபற்றி எவரும் கேள்வி எழுப்பியது கிடையாது.
இது ஒரு தனிமனிதப்பிரச்சனை அல்ல. அவர் முழுமையாக வடமாகாண சுகா தார அமைச்சுக்கு உள்வாங்கப்படுவதை நாம் வரவேற்பதாகவே கூறிவரு கின் றோம். மத்திய அரசின் கீழுள்ள ஓர் அதிகாரி மாகாண பொதுச் சேவைக்குரிய பணியில் அமர்த்தப்படுவது சட்டப்படியும்
அதிகாரப்பகிர்வுத் தத்தவத்துக்கும் முரணானவை என்பதையே நாம் சுட்டக் காட்டி வருகின்றோம். அத்துடன் சேவைக்காலம் முழுவதிலும் நிரந்தரமாக போதனா மருத்துவமனையில் கடமையாற்ற நியமிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரை மாகாண பகிரங்கச் சேவைக்கு நியமனம்
செய்வது அப்பட்டமான முரண்பாடும், தவறானதுமாகும் என்றும் குறிப்பிட்டுள் ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், மாகாண நிதி கையாள்கை தொடர்பான எழுத்தாணை அரச தலைவரால் நியமிக்கப்படும் தலைமைச் செயலருக்கே வழங்கப்படுகின்றது.
இவரே மாகாண சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அதிகாரக் கையளிப்பு வழங்குகின்றார். இத்துடன் மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 32(1) இன்படி மாகாண பகிரங்க சேவை அலுவலர்களின் நியமனம், இடமாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்று, கட்டுப்பாடு என்பன மாகாண ஆளுநருக்கு
உரித்தாக்கப்பட்டுள்ளது. மாகாண பகிரங்க சேவை சாராத ஒருவர் மீது ஆளுநர் எந்தவித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க முடியாது. எனவே மாகாண பகிரங்க சேவையைச் சேராத ஒருவருக்கு தலைமைச் செயலர் அல்லது அவரால் அதிகார கையளிப்பு வழங்கப்பட்ட எவருமோ நிதிச் செயற்பாடுகளுக்கான
அதிகாரத்தை வழங்க முடியாது. அவ்வாறு நிதி கையாளப்படுதல் சட்ட விரோத மானது என்பதை பதிவு செய்ய விரும்புகின்றோம். இந்த விடயத்தில் தங்களது நிலைப்பாடு மாறாமல் இருக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் -– என்றார்.