யாழ்.மாவட்ட செயலகம் அருகில் விபத்து..! ஒருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலகம் அருகில் விபத்து..! ஒருவா் படுகாயம்..

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளாா். 

குறித்த பகுதியில் உள்ள வீதியினூடாக பயணித்த ஹயஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு