மாவை கந்தனுக்கு 45 அடி உயரத்தில் “முக உத்தர” ரதம் நாளை வெள்ளோட்டம்..
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆறுமுகபெருமானுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகஉத்தர சித்திர தேர் வெள்ளோட்டம் நாளை (28) ஞாயிற்றுக்கிழமை முற் பகல் 10 மணிக்கு வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதி சிறப்பும் மிகப் பெரியதுமான பஞ்சரதங்களின் நடுநாயகமாக விளங்கும் சண்முகப் பெரு மானின் முக உத்தர திருத்தேர் 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏனைய நான்கு தேர்கள், சப்பரம், திருமஞ்சம்,
கைலாயவாகனம் என்பவற்றுடன் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது முன்பி ருந்த முகஉத்தர தேரை விட இன்னும் பெரிதாகவும் 45 அடி உயரம் கொண்டு மேலும் சிறப்பான சிற்பங்களையும் கொண்டதாக தேர் அமைக்கப்பட்டுள்ளது.
தேரினை யாழ்ப்பாணம் உடுவிலம்பதி நிதர்சன் சிற்பாலய அதிபர், விஸ்வபிரம்மஸ்ரீ சிற்பகலாரத்தினம், ஸ்தபதி, கந்தசாமி இளங்கோவன் (கோபி ஆச்சாரியார்) தலைமையில் அவர்தம் பஞ்சகிருத்திய பரிவாரர்கள். நிர்மாணித்துள்ளனர்