கன்னியா அபகரிப்பை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
வடக்கு கிழக்கு தமிழர் பூர்விக இடங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை கண்டித்து பிரித்தானிய வாழ் தமிழர்களால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 23ம் திகதி நடைபெற்ற குறித்த ஆர்பாட்டமானது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. முக்கியமாக கன்னியாவில் தமிழர் நிலம் அடாத்தாக அபகரிப்படுவதை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரிப்பதை நிறுத்து!
வெடுக்குநாறிமலை மற்றும் வாவெட்டிமலை போன்ற தமிழர் வழிபாட்டிடங்களை அபகரிக்காதே ! போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கொட்டொலிகளை கொட்டித்தீர்த்தனர். கடந்த காலங்களில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் ஊடாக சிங்கள அரசு திட்டமிட்டு தமிழர் நிலங்களை அபகரிப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.