நோயாளியின் நகை திருட்டு..! சாவகச்சோி வைத்தியசாலையில் களேபரம்..

ஆசிரியர் - Editor I
நோயாளியின் நகை திருட்டு..! சாவகச்சோி வைத்தியசாலையில் களேபரம்..

சாவகச்சோி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெண் நோயாளாின் நகை காணாமல்போன நிலையில் விடுதிக்கு வெளியே வீசப்பட்டிருந்த நிலையில் நகையை பொலி ஸாா் மீட்டிருக்கின்றனா். 

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவர் தனது தங்க நகையைக் கழற்றி பணப்பையில் வைத்திருந்துள்ளார். 

அவரது பணப்பை கீழே வீழ்ந்து கிடந்துள்ளது. அதனை எடுத்த பொதுமகன் ஒருவர் வைத்தியசாலை சிற்றூழியரிடம் கையளித்துள்ளார். அதனை வாங்கிய பெண் சிற்றூழியர், உரியவரிடம் கையளிக்காது வைத்திருந்துள்ளார். 

தனது பணப்பையைக் காணவில்லை என்று பெண் நோயாளர், விடுதியின் தாதிய உத்தியோகத்தரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அவரது பணப்பை சிற்றூழியரால் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பணப்பையிலிருந்த 

சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையைக் காணவில்லை என்று பெண் நோயாளர் விடுதி தாதிய உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார். விடுதியில் அவரது தங்க நகை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனால் பெண் நோயாளர் தனது உறவினர்களுக்கு விடயத்தைத் தெரியப்படுத்தியால் அவர்கள் அங்கு வந்து சகலரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பெண் நோயாளரின் உறவினர்கள் இணைந்து விடுதி முழுவதும் தேடியும் தங்க நகை கிடைக்கவில்லை. அதனால் பணப்பையை வைத்திருந்த சிற்றூழியரை விசாரணைக்கு உட்படுத்துமாறு பெண் நோயாளரின் உறவினர்கள் கோரினர்.

இந்த நிலையில் காணாமல் போன தங்க நகை நோயாளர் விடுதியின் வெளி வளாகத்திலிருந்து மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு