உயிா்போகும் தறுவாயிலும் தன் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி..! உலகத்தின் உயிரை உலுக்கிய புகைப்படம்..
சிாியா நாட்டில் வான்வழி விமான தாக்குதலில் கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய தனது தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி உயிாிழந்த சம்பவம் சா்வதேச அளவில் சோக சம்பவமாக பேசப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டு பகுதியான இட்லிப் மாகாணத்தில் ரஷ்யாவும், சிரியாவும் கடந்த பத்து நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதில் கடந்த புதன் கிழமையன்று இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். இதில் 3 குழந்தைகளும் அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடம் இடிந்து விழுந்து சரிந்தது. 5-வது தளத்தில் இருந்த சிறுமி நிஹாம் என்பவரின் குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பாதி உடல் வெளியே
தெரிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துகா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது.