பேருந்துக்குள் பயணிகளை வைத்து கதவுகளை மூடி பொலிஸாா் அட்டகாசம்..! பாதுகாப்பு போா்வையில் சண்டித்தனம்..
பயணிகளை பேருந்துக்குள் வைத்து பேருந்தின் கதவுகளை மூடிய பொலிஸாா் நீண்டநேரம் அடாவடியில் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
வவுனியா பேருந்து நிலையத்திலேயே இந்த அடாவடியை பொலிஸாா் நிகழ்த்தியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
புதிய பஸ் நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களாக சோதனைச்சாவடி நிலையத்தினை அமைத்துள்ள பொலிஸார் பஸ் நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மீது
சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி சென்ற
தனியார் பஸ் ஒன்றினை பஸ் நிலையத்திற்குள் சென்ற பஸ் சோதனைச்சாவடியில் பொலிஸார் இல்லாத நிலையில் பஸ்ஸை உள்ளே செலுத்தி பயணிகள் இறக்கிக்கொண்டிருந்தபோது
திடீரென்று பஸ்ஸை அண்மித்த பொலிஸார் பஸ்ஸின் இரண்டு பிரதான கதவுகளையும் மூடியதுடன் பஸ்ஸின் பயணிகளை இறக்கி சோதனை மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கை பஸ் நிலையச் சோதனைச்சாவடியிலுள்ள பொலிஸாரின் அடாவடித்தனத்தை எடுத்துக்காட்டியுள்ள தாகவும், வேறு எந்த மாவட்டத்திலும் பஸ் நிலையங்களில்
இவ்வாறான சோதனை சாவடிகள் இல்லை எனவும் வவுனியாவில் மட்டும் ஏன் இவ்வாறான செயற்பாடுகள் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும் வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து பொலிஸாரின் சோதனைச்சாவடி அகற்றப்படவில்லை
அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானும் குறித்த சோதனைச்சாவடியை உடனே அகற்றிவிடுமாறும்
நாட்டில் நீரான நிலை நிலவுகின்ற நேரத்தில் இச் சோதனைச்சாவடி தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.