பிரிட்டன் அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு முக்கிய பொறுப்பு!
பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் உள்ளிட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரிட்டனின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் உள்துறை அமைச்சர். இதேபோல, இணையமைச்சர் பொறுப்பில் இருந்த அலோக் சர்மா, கேபினட் அந்தஸ்துடன் சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவார். பிரிட்டனின் தேசிய வருவாயில், 0.7 சதவீதத்தை ஆண்டுதோறும் சர்வதேச உதவியாக வழங்கும் நிலையில், அதற்கு பொறுப்பான துறைக்கு அலோக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சஜித் ஜாவீத் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கடுத்த பொறுப்பில் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹாம்ப்ஷையரில் பிறந்தவரான 39 வயது ரிஷி சுனக், யார்க்சையரின் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், முதல் முறையாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.