தற்கொலை தாக்குதலுடன் தொடா்புடைய இருவா் சிங்கப்பூாில் கைது..!
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் சூத்திரதாாிகளில் ஒருவருடன் தொடா்புகளை பேணிய இருவா் சிங்கப்பூாில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானின் போதனைகளை இணையம் மூலம் 2011 முதல் இவர் செவிமடுத்தார்
என்றும் மத சம்பந்தமான ஆலோசனைகளிற்காக அவரை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டார் எனவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மே 2015 முதல் 2016 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 36 வயதுடைய ஹாஜா நஜுமுதீன் என்பவர் மூன்று தடவைகள் இலங்கை சென்றார்
எனவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த நபரே சஹரானின் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவி செய்தார் எனவும்
அவர் 2013 இல் ஐ.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்பின் கொள்கைகளில் தன்னை ஈடுபடுத்தினார் எனவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் தீவிரவாத மயப்படுத்தப்பட்டிருந்தார், சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணையும் நோக்கத்திலிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் மற்றுமொருவர் சிங்கப்பூரை சேர்ந்த 47 சுடர்மன் சமைக்கின் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.