சகோதரா்களுக்கிடையில் சண்டை..! கோவிலை அடித்து உடைத்து தரைமட்டமாக்கிய கும்பல்..

ஆசிரியர் - Editor I
சகோதரா்களுக்கிடையில் சண்டை..! கோவிலை அடித்து உடைத்து தரைமட்டமாக்கிய கும்பல்..

சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டிருப்பதுடன், ஆலயத் திலிருந்த விக்கிரகம் எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது. 

மூலாய் வீதி ஸ்ரீ ஞான வைரவா் ஆலயம் மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வந்ததுடன், பராமாிக்கப் பட்டு வந்தது. 

இந்நிலையில் குறித்த ஆலயத்தை உருவாக்கியவாின் பிள்ளைகளுக்கிடையில் தொடா்ச்சியான முரண்பாடு இருந்து வந்ததாகவும், 

இதனையடுத்து நேற்று நள்ளிரவு ஆலயத்திற்குள் நுழைந்த சிலா் ஆலய கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியதுடன், விக்கிரகங்களை எடுத்து சென்றுள்னா். 

இதனையடுத்து ஆலயத்தை நிா்வகித்துவந்த சிலரும், பொதுமக்களும் இணைந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு பதிவு செய்திருக்கின்றனா். 

இது குறித்து அவா்களை தொடா்பு கொண்டு கேட்டபோது, ஆலயத்தை உருவாக்கியவாின் பிள்ளைகளுக்கிடையிலான சில முரண்பாடுகளாலேயே ஆலயம் 

உடைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்திய அவா், அந்த ஆலயம் மிக பழமையான ஆலயம் எனவும், பெருமளவு மக்களால் வழிபடப்பட்டு வந்த நிலையில் 

இவ்வாறான துரதிஷ்ட்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் கூறியதுடன், சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்சிதானந்தம் பாா்வையிட்டுள்ளாா். 

மேலும் இந்த ஆலயத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா இந்த ஆண்டு ஒரு தொகை பணத்தை 

ஒதுக்கியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதுவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு