SuperTopAds

530 மில்லியன் செலவில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
530 மில்லியன் செலவில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது..!

யாழ்.போதனா வைத்திய சாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொலை நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாய பூர்வமாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் 

கலாவ் (ப்)பூ தாஃயர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தைத் திறந்து வைத்துள்ளனர். 

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் வடக்கு ஆளுநரின் எயலாளர் உட்பட வைத்தியர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையமானது 

சிங்கப்பூர் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இணையானதாக நாட்டில் வேறு எந்த வைத்திய சாலையில் இல்லாத நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சை நிலையத்தில் வத்தியர்கள், 

தாதியர்கள் மற்றும் இயன் மருத்துவர் ஆகியோருக்கான பயிற்சி வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலைய திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மேலும் இச் சிகிச்சை நிலையத்தில் என்பு முறிவு, 

மூட்டுக்களில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் நீண்டகாலமாக படுக்கையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகள், இயன் மருத்துவர்களின், உடற்பயிற்சிகள், என்பு முறிவு, போர் மற்றும் விபத்துக்களால் கை, கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்கள் 

 வடிவமைத்து வழங்கப்படும். செயற்கை அவயவ வடிவமைப்பு நிபுணர்களின் சேவைகள் , விசேட தேவை உள்ளோருக்கான தொழில் வழிகாட்டு நிபுணர்களின்(ழுஉஉரியவழையெட வுhநசயிளைவ) உடற்பயிற்சிகள், 

சிகிச்சைகள் என்பனவும் வழங்கப்படும்.இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் செயற்பட ஆரம்பித்ததும் போர் , விபத்து மற்றும் அனர்த்தங்களின் போது பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைக்குப் பிந்திய இயன் மருத்துவர்கள், 

தொழில் வழகாட்டும் சிறப்பு நிபுணர்களின் சேவைகள் நவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிறந்த முறையில் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.