SuperTopAds

ஐ.நா மனித உாிமைகளுக்கான குழுவை சந்தித்த ஆளுநா்..! என்ன பேசப்பட்டது..?

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உாிமைகளுக்கான குழுவை சந்தித்த ஆளுநா்..! என்ன பேசப்பட்டது..?

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி Mr.Clément Nyaletsossi Voulé னுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான 

செயற்பாடுகள் தொடர்பில் ஐநா விசேட பிரதிநிதிக்கு இதன்போது விளக்கமளித்தார். காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் 

உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் செயற்பட்டு வருவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் தடைபட்டிருந்த பாதுகாப்பு படைகளின் வசமிருந்த் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் 

ஆரம்பிக்கப்பட்டுள்ளதனையும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.