திருமணத்துக்காக இடம் பெயரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் தகவல்!
திருமணத்துக்காக இடம் பெயரும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2001 மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 30 கோடியே 90 லட்சம் பெண்களில் 20 கோடியே 60 லட்சம் பெண்கள் திருமணத்துக்காக பிறந்த ஊரை விட்டு இடம் பெயருகின்றனர்.
14 கோடியே 60 லட்சம் ஆண்களில், 53 லட்சம் ஆண்கள் மட்டுமே திருமணத்துக்காக இடம் பெயருகின்றனர். இருப்பினும், ஆண்கள் இவ்வாறு இடம் பெயருவது 2001-ஐக் காட்டிலும் 2011 கணக்கெடுப்பில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மேகாலயா, தமிழ்நாடு, மிசோரம், கேரளா, அசாம், மணிப்பூர், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆண்கள் திருமணத்திற்காக இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற ஆண்களை விட கிராமப்புற ஆண்கள் இடம் பெயர்தலே ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.